1800 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்!!

1800 வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்!!

Published on

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 1லட்சத்து 64 ஆயிரம்  ரூபாய் மதிப்பிலான மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி  அடுத்த வெட்டப்பட்டு கிராமம் வட்டக்கொல்லி பகுதியைச் சார்ந்த மூர்த்தி (50) மற்றும் சாந்தா (42) ஆகிய இருவரும் வெளிமாநில மது பாக்கெட்டுகள் வாங்கி விற்பனை செய்து வருவதாக வாணியம்பாடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், வாணியம்பாடி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் மூர்த்தி வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 1 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான ஆயிரத்து 800 மது பாட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் போலீசார் வருவதை அறிந்து மூர்த்தி மற்றும் சாந்தா ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com