
கடந்த ஏப்ரல் 22 -இல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு முறை பயணமாக சவுதி சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார். முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நேற்று பிபிசி வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் “தாக்குதலில் ஈடுபட்டவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதேனும் வெளிவரவில்லை, ஆனால் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் - இ - தொய்பாவுடன் தொடர்புடைய பெரிதும் வெளியில் தெரியாத The Resident Front இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் சந்தேகிப்பதாக குறிப்பிட்டிருந்தது.
இந்தத் தாக்குதலில் சந்தேகிக்கப்படும் ஆதில் குரீ, அபு தல்ஹா, சுலேமான் ஷா மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்புத் துறை வெளியிட்டது. சவிசாரணை அமைப்புகள் சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகளின்படங்களை வெளியிட்ட சிலமணிநேரங்கள் கழித்து இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பீகாரில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றினார். இந்த கூட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் பலியானோருக்கு 2நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு அனுதாபங்களை தெரிவித்து, அவர்களுக்கு ஆதரவாக நாடே நிற்பதாகவும் தெரிவித்தார்,
மேலும் அவர் பேசுகையில் “ இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொருவரும், அவர்களுக்கு பின்னால் உள்ளவர்களும் கண்காணிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள்" இந்த பீகார் மண்ணில் நான் ஒரு வாக்கு அளிக்கிறேன், தாக்குதலை நடத்தியவர்கள் உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் அவர்களை தேடிக்கண்டுபிடித்து கற்பனைக்கு எட்டாத வகையில் தண்டனை வழக்கப்படும். மேலும் இந்த கடினமான நேரத்தில் எங்களோடு துணை நின்ற பிற நாடுகளின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் எனது நன்றி
இந்திய ஆன்மாவை தொட்டுப் பார்க்க நிலைக்கு எவருக்கும் பாடம் புகட்டுவோம். இங்குள்ள 140 கோடி இந்தியர்களும் தீவிரவாதத்தின் முதுகெலும்பை உடைப்பார்கள் என சூளுரைத்தார்.
இந்த தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது, குறிப்பாக எல்லைப்பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாகா எல்லையை மூடிவிட்டது, சிந்து நீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் முறித்திருக்கிறது, அனைத்து விதமான போக்குவரத்துக்கு சேவைகளையும் நிறுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்