“கேஸ் கம்பெனி ஊழியர் கொலை” - பணம் திருடியதால் நடந்த விபரீதம்.. ஆத்திரத்தில் அடித்தே கொன்ற 53 வயது முதியவர்!
சென்னை மாவட்டம், வியாசர்பாடி பி கல்யாணபுரம் இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் 46 வயதுடைய தாஸ் என்கின்ற குமார். இவர் அதே பகுதியில் உள்ள கேஸ் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த (செப் 26) ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் வியாசர்பாடி தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மழை நீர் வெளியேற்றும் நிலையம் அருகே தாஸ் படுத்து கொண்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற நபர்கள் பார்த்த போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து வியாசர்பாடி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சோதனை செய்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தாஸின் உடலை கைப்பற்றிய போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் சில இடங்களில் காயம் இருந்ததால் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பிரேத பரிசோதனை முடிவில் இவரது உடம்பில் கை கால் மற்றும் வயிறு ஆகியவற்றில் காயம் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அந்த மழைநீர் வெளியேற்றும் மையத்தில் மோட்டார் ரூம் வாட்ச்மேனாக பணியாற்றி வந்த வியாசர்பாடி சி கல்யாணபுரம் நான்காவது தெருவை சேர்ந்த 53 வயதுடைய சங்கர் என்ற நபரை அழைத்து வந்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் சம்பவத்தன்று குடித்துவிட்டு தாஸ் சங்கரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதும். இதே போல பலமுறை சங்கரின் பணத்தை இறந்து போன தாஸ் எடுத்துச் சென்று குடித்துவிட்டு வந்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்கனவே ஆத்திரம் அடைந்த சங்கர் தாஸை சம்பவத்தன்று அடித்து கீழே தள்ளியதில் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சங்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.