“கூட்டு பாலியல் வன்கொடுமை... பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடூர கொலை!”- 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் மீது போக்சோ

அருகிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றுள்ளனர்..
assam pocso case
Published on
Updated on
2 min read

அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில், சனிக்கிழமை இரவு அன்று 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  அண்ட் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் தொடக்கத்தில், ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தேகத்தின் பேரில் ஐந்து இளைஞர்களை கைது செய்ததுள்ளது காவல்துறை. ஆனால் திங்கட்கிழமை அன்று 17 சிறுவர் முதல் 19 வயதுக்குட்பட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். அதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. "அவர்களில் ஒருவருக்கு பதினேழரை வயதுதான் ஆகிறது. ஆனால், இந்த வழக்கின் கொடூரத்தைக் கருத்தில் கொண்டு, அவரை வயது வந்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக ஹைலாகண்டி சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் அமிதாப் சின்ஹா தெரிவித்துள்ளார்.

விசாரணையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு கட்லிச்சேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலோய்ச்சோரா என்ற பகுதியில் இந்த சம்பவம்  நடந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அந்த நேரத்தில் அருகிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும் விருந்தில் கலந்துகொண்டுள்ளார். ஆனால் அங்கு ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோவித்து கொண்டு சாப்பிடாமல் இரவு 10.30 மணிக்கு தனது வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார். குடுப்பதினரும் அவளை சமாதானப்படுத்தாமல், வீட்டிற்கு உணவு கொண்டு கொடுத்திடலாம் என விட்டுள்ளனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய போது, சிறுமியின் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சிறுமியின் உடல், அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்த நிலையில் தரையில் கிடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். "மிகவும் கொடூரமாக… அதுவும் ஒரு சிறுமியை, எப்படி இவ்வளவு மிருகத்தனமாக நடத்த முடியும்?" என்றும் “குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வன்கொடுமைக்கு பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் கொண்டு சிறுமியின் உடலைச் சிதைத்ததாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி குற்றம்சாட்டி உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டு இருந்ததாகவும், பல்வேறு பொருட்களை கொண்டு சித்திரவதை செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) பிரிவு 65(1), 103(1) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012 பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. "அடுத்தக்கட்ட விசாரணையில் மேலும் சில பிரிவுகளைச் சேர்க்கக்கூடும்," என்றும் “இந்த வழக்கில் மேலும் கைதுகள் நடக்க வாய்ப்புள்ளது” என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

"மேலும் பலரின் கைபேசிகளை நாங்கள் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்," என்றும் “கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக" காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையில் கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதும், அவரது வீட்டைப் பற்றி அவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் 'அந்தப் பெண்ணுக்கும் சிறுவர்களுக்கும் இடையே தகவல் தொடர்புகள் இருந்தாகவும், நாங்கள் இது குறித்து விசாரித்து வருகிறோம். இருப்பினும், எங்களால் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது. ஒரு முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்று மட்டுமே எங்களால் கூற முடியும்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதிகளில் போராட்டங்களைத் தூண்டியுள்ளது. ஹைலாகண்டியில், அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளூர் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்" என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com