“ரத்தக்கறையுடன் சிதைந்து கிடந்த சடலம்” - 100 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட மூதாட்டி… கொடைக்கானலில் பரபரப்பு!

இந்த இளைஞர் மீது ஏற்கனவே மூதாட்டி கற்பழிப்பு வழக்கு ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் உள்ள நிலையில் தற்போது..
“ரத்தக்கறையுடன் சிதைந்து கிடந்த சடலம்” - 100 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட மூதாட்டி… கொடைக்கானலில் பரபரப்பு!
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலை பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வசித்து வந்தவர் 74 வயதுடைய தனபாக்கியம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக பெருமாள் மலை, பழனி ரோடு பகுதிக்கு சென்று அங்குள்ள கடையில் காய்கறி வாங்கி கொண்டு திரும்பி செல்லும் போது ஆணை கிரி சோலை பகுதி வழியாக சென்ற மூதாட்டி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். எனவே மூதாட்டியை அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில் நிலையில் கடந்த (மே 1) அம்மா தேதி ஆனகிரி சோலை பகுதியில் மூதாட்டி ஆடைகள் களைந்தவாறு அரை நிர்வாணமாக இரத்த காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திண்டுக்கல் டிஐஜி எஸ்பி அறிவுறுத்தலின் பேரில் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் முஹாட்டியின் செல்போனை லொகேஷன் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியை காட்சியின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர்.

Admin

இந்த நிலையில் ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் குற்றவாளியைத் தேடி வந்த நிலையில் மூதாட்டியின் செல்போன் லொகேஷன் ஆண்டிப்பட்டியில் இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் குற்றவாளி ஆண்டிபட்டியை சேர்ந்த 27 வயதுடைய பெரியகருப்பன் என்பதும் அவர் ஆண்டிபட்டியில் இருந்து இடம் பெயர்ந்து கொடைக்கானல் மேல்மலை கிராம புதுப்புத்தூரில் தனது குடும்பத்தினுடன் விவசாயம் செய்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை பழனி பிரதான மலை சாலையில் அருணகிரி சோலை அருகே மூதாட்டி நடந்து சென்றதை பார்த்த பெரிய கருப்பன் மதுபோதையில் இருந்த நிலையில் மூதாட்டியை பின் தொடர்ந்து அவரது செல்போனை பறித்து, சாலை அருகே உள்ள வனப்பகுதியில் தள்ளிவிட்டு அதன் பின் சுமார் 100 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று கற்பழித்தது தெரியவந்தது. எனவே போலீசார் குற்றவாளி மீது கற்பழிப்பு கொலை உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த இளைஞர் மீது ஏற்கனவே மூதாட்டி கற்பழிப்பு வழக்கு ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த சம்பவம் கொடைக்கானலில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com