காவலர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்களை, கொத்தாக தூக்கிய தனிப்படை!

Published on: 
Updated on: 
1 min read

சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கத்தில் காவலர்களைத் தாக்கிய வடமாநில கும்பலை போலீசார் தேடி தேடி கைது செய்தனர்.

கடந்த 23 ஆம் தேதி  தொழிற்சாலை  ஒன்றில் ஆயுத பூஜைக்  கொண்டாட்டத்தின் போது வட மாநில தொழிலாளர்கள் இரு தரப்பினர் மோதி கொண்டனர். 

அதனையடுத்து, தொழிற்சாலையின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், விசாரிக்கச் சென்ற காவலர்கள் ரகுபதி மற்றும் சக காவலர்களை, வட மாநில தொழிலாளர்கள் தாக்கியத்துடன், போலீஸ் நகங்களையும் சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

புகாரை விசாரிக்க சென்ற காவலர்களை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்திற்கு பிறகு முதலில் 5 பேரை காவலர்கள் கைது செய்திருந்தனர். அதன் பின்னர் நடந்த விசாரணையில், மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் அதிரடிப் படையினரின் துணையுடன், இரவு முழுவதும் விடிய விடிய தேடித் தேடி கைது செய்துள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com