
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட40 ஆயிரம் லிட்டர் பயோடீசலை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம் பகதூர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அய்யனார் என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் குடிமை பொருள் வழங்கல் சிறப்பு உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.