இரவுக்காட்சி படம் முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீஸ் கைது...

இரவுக்காட்சி படம் முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீஸ் கைது...

மதுரையில் நள்ளிரவில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்து தன் நண்பருடன் இல்லத்திற்கு சென்ற பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்கார செய்ய முயன்ற போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

மதுரை செல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு நள்ளிரவு நேரத்தில் திரைப்படத்தை பார்த்து முடித்து விட்டு தனது இல்லத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த தன் நண்பரோடு வந்த பெண்ணை அந்த வழியாக பரிசோதனையில் இருந்த முருகன் என்ற போலீசார் வழிமறித்து விசாரணை செய்ததோடு அவரின் ஆண் நண்பரிடம் இருந்த கைபேசி மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அவரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்து விட்டுள்ளார். 

அந்தப்பெண்ணை விசாரித்து வெளியில் அனுப்பி விடுகிறேன் என்று சொன்னவர் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதன் அடிப்படையில் பின்பு அந்தப் பெண்ணை ஆட்டோவில் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்பு தன் நண்பரிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூற அவருடைய நண்பர் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் முழுவதும் விசாரித்த போலீசார் சம்பவம் உண்மையானதுதான் என்று அறிந்ததும் தற்சமயம் முருகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த சம்பவம்  மதுரை மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது வேலியே பயிரை மேயும் என்ற அச்சத்தில் உள்ளனர் அனைத்து துறைகளிலும் நல்லவர் கெட்டவர்கள் உள்ளதுபோல் காவல்துறையிலும் ஒரு கெட்ட களை இருந்ததை உணர்ந்த காவல்துறையினர் உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ள சம்பவம் பாராட்டக் கூடியதே என்று பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com