கத்தியைக்காட்டி வழிப்பறி... திருவள்ளூர் அருகே 2 பேர் கைது...

கத்தியைக்காட்டி வழிப்பறிச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேர்  போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தியைக்காட்டி வழிப்பறி... திருவள்ளூர் அருகே 2 பேர் கைது...
Published on
Updated on
1 min read
திருவள்ளூர் அருகே சாலையில் நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை சிசிடிவி காட்சிகளின்  அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். 
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான அருண் மற்றும் விஷ்வா ஆகியோர், திருவள்ளூர் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், பெரியகுப்பம் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. 
இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஒண்டிகுப்பத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் காக்களூர் பகுதியைச் சேர்ந்த சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com