அரிவாளுடன் கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்கள்...போதையில் அராஜகம் செய்த இருவரை கைது செய்த போலீசார்!

தஞ்சாவூரில் அரிவாளுடன் கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். 
அரிவாளுடன் கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்கள்...போதையில் அராஜகம் செய்த இருவரை கைது செய்த போலீசார்!
Published on
Updated on
1 min read

கரந்தை காந்திஜி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மளிகை கடை, மெடிக்கல் ஷாப் என பலக் கடைகளில் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

அப்போது அவர்கள் பணம் தர மறுத்த செந்தில்வேல் என்பவரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை கிழக்கு போலீசார் போதையில் அரிவாளை காட்டி அராஜகம் செய்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com