நாமக்கல் ரவுடியை சிறையில் அடைத்த போலீசார்...

பிரபல நாமக்கல் ரவுடியை ஆம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் ரவுடியை சிறையில் அடைத்த போலீசார்...
Published on
Updated on
1 min read

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக  சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக சென்ற காரை சினிமா பாணியில் காவல்துறையினர் மடக்கி பிடித்து காரில் சோதனை மேறக்கொண்ட போது காரில் கத்தி, வீச்சு அரிவாள், என பல பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக தகவல் அறிந்தனர்.

உடனடியாக காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்க்கொண்ட போது, அந்நபர் நாமக்கல் பகுதியை சேர்ந்த காசி என்பதும், இவர் மீது நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட நகர காவல்நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டை பஞ்சாயத்து, என 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக ஆம்பூர் போலீசார் காசியை திருப்பத்தூர் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com