பெண் ஊழியரிடம் தவறாக நடந்துக் கொண்ட தலைமை மருத்துவர்...! போலீசாரிடம் புகார் அளித்த ஊழியர்..!!

பெண் ஊழியரிடம் தவறாக நடந்துக் கொண்ட தலைமை மருத்துவர்...! போலீசாரிடம் புகார் அளித்த ஊழியர்..!!

Published on

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆனந்தன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் நடந்த நிகழ்வு குறித்து கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தலைமை மருத்துவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com