ரூ.10 லட்சம் தரலைனா மனைவியின் ஆபாசபடத்தை நெட்ல விட்றுவேன்!  சாமானியரை மிரட்டிய காவலர்…   

ரூ.10 லட்சம் தரலைனா மனைவியின் ஆபாசபடத்தை நெட்ல விட்றுவேன்!  சாமானியரை மிரட்டிய காவலர்…  

10 லட்சம் ரூபாய் தரவில்லையென்றால் மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டிய காவலரை பணியிடை நீக்கம் செய்து மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.  
Published on

10 லட்சம் ரூபாய் தரவில்லையென்றால் மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டிய காவலரை பணியிடை நீக்கம் செய்து மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் முத்தியால்பேட்டையில் கொரியர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த கொரியர் கம்பெனிக்கு ஜெயபிரகாஷின் மனைவி வரும்போது முத்தியால்பேட்டை காவலரான பெஞ்சமின் பிராங்க்ளினுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தனது மனைவியுடன் எடுத்த ஆபாசப் புகைப்படத்தை காவலர் பெஞ்சமின் சமூக வலைதளங்களில் பதிவிடபோவதாகவும், அப்படி செய்யாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டுவதாக கணவர் ஜெயபிரகாஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் எண்ணூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பெஞ்சமின் பிராங்க்ளினை பணியிடை நீக்கம் செய்து மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com