போலீசுக்கு தண்ணி காட்டிய எஞ்சினியர் கைது! அதிரடி செய்த ஆவடி போலீஸ்!

உள்ளூர் போலிஸ்க்கு தண்ணி காட்டிய சாப்ட்வேர் என்ஜினியரை சுற்றி வளைத்து கைது செய்த ஆவடி தனிப்படை போலிஸ் அதிரடி செய்துள்ளது.
போலீசுக்கு தண்ணி காட்டிய எஞ்சினியர் கைது! அதிரடி செய்த ஆவடி போலீஸ்!
Published on
Updated on
1 min read

போரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சாப்ட்வேர் என்ஜினியர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து ஆவடி துணை கமிஷனர் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வேளச்சேரியை சேர்ந்த அருண்குமார்(29), என்பவர் போரூர் பகுதியில் போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்தபோது  கைது செய்து விசாரித்த போது அவரிடம் போதை பொருட்கள் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.

மேலும், இவர் ராமாபுரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை செய்து வந்ததும் ஆன்லைனில் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததுள்ளார். குறிப்பாக போதை பொருட்களை ரூ.250க்கு வாங்கி ரூ.2000 வரை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து போதை பொருட்கள் சிலைவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இவருக்கு வேறு யாரிடம் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com