பிரபல ரவுடி பாம் ரவி மீது வெடிகுண்டு வீசி கொலை: பட்டப்பகலில் அரங்கேறிய கொடூர சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி...

புதுச்சேரி அருகே பட்டப்பகலில் பிரபல ரவுடி உட்பட இருவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பிரபல ரவுடி பாம் ரவி மீது  வெடிகுண்டு வீசி கொலை: பட்டப்பகலில் அரங்கேறிய கொடூர சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி...
Published on
Updated on
1 min read

புதுச்சேரி அருகேயுள்ள வாணரப்பேட்டையை சேந்தவர் பாம் ரவி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ரவி தனது நண்பர் பெரிடோவுடன், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்கள் மீது வெடிகுண்டை வீசிவிட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டப்பகலில் அரங்கேறிய இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com