“வடிவேலு காமெடி நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா?” - தாயை மீறி கஞ்சா வாலிபருடன் திருமணம்.. கண்ணீர் மல்க காவல் நிலையத்தில் புகார்!

பிரவீன் குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்...
Premapriya Police Complaint
Premapriya Police Complaint
Published on: 
Updated on: 
2 min read

பம்பரக்கண்ணாலே திரைப்படத்தில் “பாக்ஸரு.. சும்மா பாத்துட்டு போறாரு” என்ற காமெடி காட்சியில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் 45 வயதுடைய துணை நடிகை பிரேமப்பிரியா. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொந்த ஊரான விழுப்புரத்தில் உள்ள அயினம்பாளையம் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் இவருக்கு 20 வயதில் பவானி என்ற மகள் உள்ளார். தனியாக மகளை வளர்த்து ஆளாக்கிய பிரேம பிரியா அவரது பள்ளி தோழி கேட்டதன் பேரில் தனது மகளை தோழியின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி விழுப்புரம் குழந்தைவேல் நகர் பகுதியில் வசிக்கும் ஆனந்தராஜா, வனிதா இவர்களின் மகன் பிரவீன் குமாருக்கும், பவானிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தம் நடைபெற்ற மூன்றாவது நாளில் பிரவீன் குமார் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரேமா பிரியா தனது மகளிடம் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என கூறியுள்ளார்.

ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு முன்பு இருந்தே பிரவீன் குமாருடன் பேசி பழகி வந்த பவானி அதற்கு மறுப்பு தெரிவித்து, அவரை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என பிடிவாதம் பிடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தாய் மற்றும் மகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே ஒரு கட்டத்தில் பவானி வீட்டை விட்டு வெளியேறி பிரவீன் குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் பிரவீன் குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தாய் பிரேமபிரியாவிடம் பேசுவதை பவானி தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (செப் 26) இரவு 10:30 மணியளவில் மகள் பவானியை பார்ப்பதற்காக பிரேமபிரியா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் பவானி வெளியே வராததால் மன வருத்தம் அடைந்த பிரேமா பிரியா “என் பொண்ணை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு.. எங்களை பிரிச்சிட்டீங்க” என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆனந்தராஜா அவரது மனைவி வனிதா, மகன் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் பிரேம பிரியாவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் ஸ்டீபன் ராஜ் மார்பில் எட்டி உதைத்ததாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த பிரேமபிரியா விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் தன்னை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் பெண்ணிடம் பேசுவதை யாரும் தடுக்கக்கூடாது என கேட்டு விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் பிரேமபிரியா கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இந்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com