சிறையில் இருந்து தப்பிய கைதி... மீண்டும் கைது...!

சிறையில் இருந்து தப்பிய கைதி... மீண்டும் கைது...!
Published on
Updated on
1 min read

புதுச்சேரி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கைதி மீண்டும்  போலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம்
திண்டிவனத்தில் அரங்கேறி உள்ளது.

திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் சுற்றி திரிவதாக பொதுமக்கள் திண்டிவனம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில சம்பவ இடத்திற்கு சென்ற காவல் உதவியாளர் வினோத் மற்றும் தனி பிரிவு போலீசார் ஆதி ஆகியோர் வாலிபரிடம் விசாரணை செய்ய முயன்றனர்.  அப்பொழுது போலீசாரை கண்ட அந்த வாலிபர் அவர்களிடமிருந்து  தப்பி ஓடி அங்கிருந்த  வீடுகளின்  மொட்டை மாடிகளில் தாவி தப்பிக்க முயன்றார். இருப்பினும் அவனை பின்தொடர்ந்த  போலீசார் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சினிமா பாணியில் நூதன முறையில் அவனைப் பிடித்தனர்.

பின்பு அவனை திண்டிவனம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது, அவன்புதுச்சேரி அங்க நாயர் தோப்பு பகுதி சேர்ந்த அமீர் அப்துல் காதர் என்பதும் இவர்  இரு சக்கர வாகன திருட்டு சம்பவத்தில் கடந்த 26 -ந்தேதி புதுச்சேரி பெரிய கடை போலீசாரால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட அவனுக்கு உடல்நிலை சரியில்லையெனக் கூறி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதும், அப்பொழுது  போலீசாரின் பிடியில் இருந்து அங்கிருந்து தப்பித்து வெளியில் வந்து அங்கும் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு திண்டிவனம் வந்து  திண்டிவனம் பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.

இந்நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார் அவனை கைது செய்து போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

புதுச்சேரி போலீசாரிடமிருந்து தப்பிய கைதி வலைக்கு தப்பிய மீன் ஒலைக்கு வந்த கதையாக திண்டிவனம் போலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம்  அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com