“அதிகாலையில் வீடு புகுந்து வெட்டப்பட்ட பெண்” - திருமணத்திற்கு மறுத்ததால் நடந்த விபரீதம்.. இரண்டாவது மனைவியால் மகளுக்கு வந்த வினை!

கையில் கொண்டு வந்திருந்த அரிவாளால் காளியம்மாளை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்...
“அதிகாலையில் வீடு புகுந்து வெட்டப்பட்ட பெண்” - திருமணத்திற்கு மறுத்ததால் நடந்த விபரீதம்.. இரண்டாவது மனைவியால் மகளுக்கு வந்த வினை!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட நெடுவாசல் ஊராட்சி வடக்கிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் 43 வயதுடைய காளியம்மாள் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சுரேஷிற்கு செங்கல்பட்டு பகுதியில் உள்ள விஜயலெட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது சுரேஷ் அவரது இரண்டாவது மனைவியுடன் மேல்மருவத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி விஜயலெட்சுமியின் தம்பியும், திருக்கழுக்குன்றம் பகுதி பாஜக அமைப்பு சாரா தொழிற்பிரிவு மாவட்டத் தலைவருமான விவினுக்கு முதல் மனைவியான காளியம்மாளின் மகளை திருமணம் செய்து தருமாறு விஜயலெட்சுமி மற்றும் விவின் தொடர்ந்து காளியம்மாளை தொந்தரவு செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால் காளியம்மாள் தொடர்ந்து திருமணம் செய்து தர மறுத்ததாக கூறப்படும் நிலையில் டீகோடர்ந்து இருவரும் தொல்லை செய்து வந்திருக்கின்றனர் இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் நேற்று அதிகாலை 3 மணியளவில் காளியம்மாள் வீட்டுக்கு சென்ற விவின் மற்றும் அவரது நண்பர்கள், அவர்கள் வந்த வாகனத்தின் ஓட்டுனர் உட்பட 4 பெரும் பெண் கேட்டு காளியம்மாளுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Admin

அப்போது அவர் திருமணத்திற்கு மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த விவின் மற்றும் அவரது நண்பர்கள் கையில் கொண்டு வந்திருந்த அரிவாளால் காளியம்மாளை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடகாடு போலீசார் காளியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விரைந்து செயல்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்துள்ள நிலையில், அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெடுவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com