“40 வயதிற்கு மேல் நடந்த திருமணம்” - 6 மாத குழந்தையை கருவிலேயே கலைத்த தாய்.. ஆத்திரத்தில் கொலை செய்தாரா கணவர்?

இருவரும் தற்சமயம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது
“40 வயதிற்கு மேல் நடந்த திருமணம்” - 6 மாத குழந்தையை கருவிலேயே கலைத்த தாய்..  ஆத்திரத்தில் கொலை செய்தாரா கணவர்?
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சங்கர்( வயது 42). இவருக்கும் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலூர் பகுதியைச் சேர்ந்த நாகநாதன் மகள் பாகம்பிரியாள் (வயது 36) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் சேர்ந்து சங்கர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த தம்பதியர் இருவருக்கும் ஏற்கனவே முதல் திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆன நிலையில், இருவரும் தற்சமயம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பாகம்பிரியாள் 6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்ததாகவும், குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமல் இருந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேவகோட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன் -மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் பாகம்பிரியாள் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்பாலைக்குடி போலீசார் பாகம்பிரியாள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த பாகம்பிரியாவின் அண்ணன் நாகரத்தினம் தனது, தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாகம்பிரியாவின் கணவர் சங்கரை பிடித்து கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com