“சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த மாணவர்கள்” - சாதி பெயரை சொல்லி தினம் செய்த சித்ரவதை.. வீடியோ பார்த்து கதறும் பெற்றோர்!

இரவு தூங்க விடாமல் முகத்தில் தண்ணீர் ஊற்றி தொந்தரவு செய்வது குடித்துவிட்டு ஓரின சேர்க்கைக்கு...
“சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த மாணவர்கள்” - சாதி பெயரை சொல்லி தினம் செய்த சித்ரவதை.. வீடியோ பார்த்து கதறும் பெற்றோர்!
Admin
Published on
Updated on
2 min read

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில் மதுரையைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகனான ஹரிபிரசாந்த் தாக்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். விடுதியில் சிறுவனின் அறையில் தங்கி படிக்கும் 9, 10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் ஹரிபிரசாந்தை விடுதியில் சேர்ந்த நாள் முதல் இரவு தூங்க விடாமல் முகத்தில் தண்ணீர் ஊற்றி தொந்தரவு செய்வது குடித்துவிட்டு ஓரின சேர்க்கைக்கு அழைப்பது என தொந்தரவு செய்து வந்திருக்கின்றனர்.

மேலும் மாணவனை சாதி பெயரை சொல்லி அவரை கொடுமைப்படுத்துவது அவர்களின் சொந்த வேலைகளை செய்ய சொல்வது என தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கின்றனர். இதை பலமுறை மாணவர் விடுதியின் வார்டனிடம் சொல்லியும் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் மாணவனை கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு தாக்கிய சக மாணவர்கள் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இது குறித்து மாணவனிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அந்த மாணவன் தன்னுடைய பெற்றோருடன் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்காக வந்திருந்தார் . அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “சக மணவர்கள் தன்னை படிக்க விடாமல் தொந்தரவு செய்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் தன்னை எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தாக்கி அடித்ததாகவும் இதனால் தான் நிம்மதி இன்றி இருந்ததாகவும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்ததாகவும் கூறினார்” . இது போன்ற சம்பவங்கள் குறித்து ஹாஸ்டல் வார்டனிடம் தெரிவித்தும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த மாணவர் தெரிவித்தார்.

Admin

இது குறித்து பேசிய சிறுவனின் தந்தை முனியப்பன் “அரசாங்கம் நடத்தும் மாணவர் விடுதி என்பதால் தான் நம்பி அங்கு எங்களுடைய மகனை சேர்த்து விட்டோம் ஆனால் அரசு மாணவர் விடுதியிலேயே இது போல தவறுகள் அத்துமீறல்கள் நடந்தால் நாங்கள் எங்கே போய் முறையிடுவது? இதுபோல என்னுடைய மகனை துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய மகனுக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவம் குறித்து என் மகன் ஹாஸ்டல் வார்டனிடம் பலமுறை தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறான் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com