
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஜெர்மின். இவருக்கும் இவரது தாய் மாமன் மகனான விஜய கோபாலன் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய கோபாலன் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். ஜெர்மின் விஜய கோபாலன் தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
பத்து வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த கணவன் மனைவி கடந்த ஐந்து வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்த ஜெர்மினை முகமூடி அணிந்து வந்த நபர்கள் குழந்தைகள் முன்னிலையில் அரிவாள் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஜெர்மின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜெர்மின் உயிரிழந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெர்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெர்மின் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது பெற்றோர்கள் “தனது மக்களின் கொலைக்கு அவரது கணவர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே ஜெர்மின் தற்கொலைக்கு முயற்சி செய்து பின்னர் மீண்டு வந்துள்ளார் எனவும் விவகாரத்திற்கு தாக்கல் செய்திருந்தார் எனவும் கூறியுள்ளனர்.
விவகாரத்தின் போது ஜீவனாம்சம் கேட்டதற்கு ஜெர்மினை விபத்து ஏற்படுத்தி அவரது கணவர் வீட்டார் தாக்கியதாகவும், இந்த கொலைக்கும் அவர்கள் தான் காரணம் எனவே அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மகளின் கொலைக்கு கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்” வீட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த பெண்மணி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.