ஓரின சேர்க்கைக்கு இணங்க மறுப்பு.. உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன்! 12-ம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்?

விசாரணையில் ஒன்பது வயது சிறுவனை ஓரினச்சேர்க்கை செய்ய 17 வயது சிறுவன் கட்டாயப்படுத்தி முயற்சி செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம்
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி அருகே நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குளத்துக் கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளான். சிறுவன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவனை போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கருக்காக்குறிச்சி கீழத்தெரு ஊராட்சி திருமுருக பட்டினம் கிராமத்தில் நேற்று இரவு 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயதான சிறுவன் திருமேணி (எ) கருப்பன்ஜி மர்மமான முறையில் வீட்டின் அருகே குளத்தின் கரையில் உடலில் காயங்களோடு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக அதே திருமுருகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் திருப்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் ஒன்பது வயது சிறுவனை ஓரினச்சேர்க்கை செய்ய 17 வயது சிறுவன் கட்டாயப்படுத்தி முயற்சி செய்துள்ளார். அதற்கு நான்கு வயது சிறுவன் மறுப்பு தெரிவித்து தப்பி ஓடிய நிலையில் சிறுவனின் கழுத்தில் துண்டை வைத்து நெரித்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிராக ஓடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றச் சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில், ஆண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது அச்சத்தையும், கவலையும் ஏற்படுத்தி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com