வட்டார வளர்ச்சி அதிகாரியின் ஓட்டுனர் பாலியல் தொந்தரவு - பெண் ஊழியர் தீக்குளிக்க முயற்சி  

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வட்டார வளர்ச்சி அதிகாரியின் ஓட்டுனர் பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறி தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
வட்டார வளர்ச்சி அதிகாரியின் ஓட்டுனர் பாலியல் தொந்தரவு - பெண் ஊழியர் தீக்குளிக்க முயற்சி   
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வட்டார வளர்ச்சி அதிகாரியின் ஓட்டுனர் பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறி தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக கணினி பணியாளராக பணியாற்றி வருபவர் ராமலட்சுமி. இவருக்கு அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரியின் ஓட்டுனர் கனகராஜ் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. மேலும், அரசின் திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் பணத்தை வட்டார வளர்ச்சி அதிகாரியும், அவரது ஓட்டுனரும் இணைந்து மோசடி செய்துவிட்டு தம் மீது பழி போடுவதாக கூறி, அவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com