பிளான் போட்டு கொலை செய்த உறவினர்கள்..! 'ஐ விட்னஸ்' மூலம் மாட்டிக்கொண்டது எப்படி??

லோகேஷிற்கு மட்டும் அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக்கொடுக்கப்பட்டுள்ளது....
victim lokesh
victim lokesh
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் வயது (25)  அதே கிராமத்தை சேர்ந்த அப்பு (24) என்கிற உதயா மற்றும் திவாகர் (23) ஆகிய மூன்று பேரும் உறவினர்கள். இருந்தபோதிலும் ஏற்கனவே  இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக நேற்று இரவு லோகேஷை கொலை செய்யும் நோக்கோடு  உதயாவும் திவாகரனும் ‘மது அருந்த செல்லாம்” எனக் கூறி ஒரு மறைவான இடத்திற்கு லோகேஷை  அழைத்துச் சென்று உள்ளனர்.

அங்கு மூவரும் மது அருந்தியுள்ளனர். ஆனால் லோகேஷிற்கு மட்டும் அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக்கொடுக்கப்பட்டுள்ளது. போதையில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை, உதயாவும் திவாகரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் கத்தி  ஆகியவற்றால் சரமாரியாக தாக்க துவங்கியுள்ளனர். 

இதனால் படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் வெகு தூரத்தில் இருந்து பார்த்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்து போன அவர், இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சம்பவ இடத்துக்குச் சென்ற மதுராந்தகம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

 இது  திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி உள்ள இருவரையும் தேடி வருகிறன்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com