பெண்ணை மதம் மாற சொல்லி சீரழித்த கொடூரர்கள்! விமானப்படை வீரர் மனைவிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை.. பள்ளி கால நண்பர்கள் தான் காரணமா?

பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு கலவையை கொண்டு வந்து தன்னைக் குடிக்க வற்புறுத்துவார்
 IAF Official's wife case
Published on
Updated on
2 min read

நாக்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான வழக்கில், விமானப்படை வீரர் ஒருவரின் மனைவி, தனது பழைய வகுப்புத் தோழர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், சூனியம் மற்றும் கட்டாய மதமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். முக்கிய குற்றவாளி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மௌலானாவை  (மதகுரு) கண்டறிய மத்திய பிரதேசத்திற்கு ஒரு காவல் குழு அனுப்பப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளும் அயாஸ் மதரே மற்றும் அவரது கூட்டாளி அமீன் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

முதல் தகவல் அறிக்கையின்படி, 2025 பிப்ரவரி 8 அன்று, ஒரு ஹோட்டலில் நடந்த சந்திப்பின் போது, ​​அயாஸ் என்ற நபர், 24 வயதுப் பெண்ணின் பானத்தில் போதைப்பொருள் கலந்ததாக கூறப்படுகிறது. அப்பெண் சுயநினைவு திரும்பியபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் அவரை ஆட்சேபனைக்குரிய வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்புவதாகவும், சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் மிரட்டி அப்பெண்ணிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், தான் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தன்னிடம் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  

இந்த விவகாரத்தில் காணொளி ஒன்று முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. அந்தக் காணொளியில், 24 வயதான அந்தப் பெண், குற்றம் சாட்டப்பட்டவரான அயாஸ் மதரே (26) என்பவரிடம் தன்னை விடுவிக்குமாறு அழுதுகொண்டே கெஞ்சுவது காணப்படுகிறது. அயாஸ், மத வசனங்களை ஓதிக்கொண்டு, அவர் மீது மீண்டும் மீண்டும் ஊதிக்கொண்டும் அவரது கைகளை வலுக்கட்டாயமாகப் பிடிக்கும்​​" காட்சிகள் மனதை பதற செய்கிறது. மேலும் அந்த பெண் “என்னை விடு" (Sodo Mujhe) என்று அந்தப் பெண் கதறுவது பதட்டமளிக்கிறது. அந்தப் பெண் அவரிடமிருந்து விடுபடப் போராடுவதும் காணப்படுகிறது. அதன் பிறகு, தான் 'மதம் மாறியவர்' என்று அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார்.

அயாஸ் அடிக்கடி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு கலவையை கொண்டு வந்து தன்னைக் குடிக்க வற்புறுத்துவார் என்று அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் அவர் உருது மொழியில் முணுமுணுத்து, அவள் முகத்தில் ஊதி, அது "ஹிப்னாஸிஸ் மற்றும் மாந்திரீகம்" என்று கூறி, அவளைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் மாந்திரீகம் அல்லது ஹிப்னாஸிஸ் சடங்கு காணப்படுவதாகக் கூறப்படுகிறது. புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தில், மே 31 அன்று, மதரே மற்றும் அவரது கூட்டாளிகள் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கல்மேஷ்வருக்கு அழைத்துச் சென்று, அங்கு மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள டாமியா கிராமத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் மௌலானா என்ற மூன்றாவது குற்றவாளி, மதச் சடங்குகளைச் செய்து, அப்பெண்ணை மதம் மாற்றுவதற்காக ' குபூல் ஹை ' என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தனது விருப்பத்திற்கு மாறாக நடந்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

சடங்கிற்குப் பிறகு, அப்பெண் இஸ்லாமிற்கு மதம் மாறிவிட்டதாகவும், அயாஸுடனான அவரது ' நிக்காஹ் ' நடந்து முடிந்து விட்டதாகவும் அந்த மௌலானா தெரிவித்துள்ளார். அவர் இறைச்சியை உண்ணவும், மத ஸ்லோகம் ஓதவும் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்தக் குழு அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அங்கு அயாஸ் அவரை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாலியல் வன்கொடுமை, தொடர் பாலியல் தாக்குதல், மிரட்டிப் பணம் பறித்தல், அச்சுறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளுடன், சூனிய எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதமாற்றம் செய்ததாகக் கூறப்படும் மௌலானாவை நாக்பூர் காவல்துறை குழு தேடி வருகிறது.

துணை ஆணையர் சுரேஷ் ரெட்டி கூறியதாவது, "தனது புகாரில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல், மதமாற்றம் மற்றும் மாந்திரீகம் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆதாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மதமாற்றம் செய்த மௌலானாவைத் தேடுவதற்காக ஒரு காவல் குழு மற்றொரு மாநிலத்திற்குச் சென்றுள்ளது. முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது."

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com