கொள்ளையர்கள் வீட்டிலிருந்து சென்றவுடன் பழனியும் அவரது மனைவியும் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர் கீழே வந்த பார்த்த ராகுல் அங்கு யாரும் இல்லாததால் உடனடியாக தாடிக்கொம்பு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவம் நடந்த பகுதிக்கு உடனடியாக வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்தனர். பிறகு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை, தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.