
சங்கராபுரம் அருகே தனியார் கேஸ் ஏஜென்சி ஊழியர் மீது அரசு பேருந்து மோதியில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தில் இருந்து மோகூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற நபர் தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் மூரார்பாளையம் மணிமுத்தாறு ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பிரவீன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் பிரவீன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் அரசு பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வேலைக்கு சென்று விட்டு மறுபடியும் தனியார் நிறுவன ஊழியர் வீட்டிற்கு திரும்பும் போது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.