நள்ளிரவில்.. சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! வசமாக சிக்கியது ரோபோவா? - சம்பவத்தை காமெண்டரியோடு நேரலை செய்த சிறுவர்கள்

சுமார் 1.2 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு மற்றும் தங்க நிற ரோபோ ஒன்று அந்த சிறுமியை பின்னாலிருந்து அணுகியதாகக் கூறப்படுகிறது.
Cologne robot harassment case
Cologne robot harassment case
Published on: 
Updated on: 
1 min read

ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு வெளியே, 16 வயது சிறுமி ஒருவரை ரோபோ ஒன்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த முழு சம்பவமும் படமாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் அந்த ரோபோவையும், ரோபோவின் சொந்தக்காரரான சிறுவனையும் அவரது நண்பனையும், அவர்களது கைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், சிறுமியைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் அந்த இயந்திரம் வேண்டுமென்றே இயக்கப்பட்டதா? என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.45 மணியளவில், மத்திய கொலோனில் உள்ள பரபரப்பான ஹோஹென்சோலெர்ன்ரிங் தெருவில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் ஒரு துரித உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ​​சுமார் 1.2 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு மற்றும் தங்க நிற ரோபோ ஒன்று அந்த சிறுமியை பின்னாலிருந்து அணுகியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வு முழுவதும் படமாக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வெக்பெர்க்கைச் சேர்ந்த, அந்த ரோபோவின் 16 வயது உரிமையாளரும், அவரது 19 வயது நண்பனும், இந்த முழு சம்பவத்தை வீடியோ எடுத்து மட்டுமின்றி, அதற்கு வர்ணனை வழங்கியதாக புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக கூறுகின்றனர்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ஃபோக்ஸ்வேகன் செடான் காரின் பின்பக்கத்தில் அந்த ரோபோவைக் கைப்பற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அந்த இயந்திரத்தையும், அந்த இருவரையும், அவர்களது கைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த ரோபோ பாலியல் துன்புறுத்தல் செய்ததா? என்ற சந்தேகம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அந்த ரோபோ எவ்வாறு இயங்கியது? மற்றும் அதன் இயக்கங்கள் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டதா? என்பதை காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சிறுமியை துன்புறுத்தும் நோக்கில் அந்த இயந்திரம் வேண்டுமென்றே கையாளப்பட்டதா? என்பது குறித்தும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com