போலி மதுபானம் விற்பனை...! 5 பேர் கைது...!

போலி மதுபானம் விற்பனை...! 5 பேர் கைது...!

Published on

அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யபடுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு போலி மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இனிக்கும் சேட், கோல்ட் வினோத், மதியழகி, பிரகஸ்பதி, விஷ்ணு ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்த 350க்கும் மேற்பட்ட போலி மதுபானங்கள், ஒரு கார், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த போலி மதுபானங்கள் எங்கு தயார் செய்யப்படுகிறது என்றும் ஆலை எங்கு உள்ளது என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com