சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஆனைக்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் 60 வயதுடைய முத்தம்மாள் என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் சேகோ ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில் முத்தம்மாள் தொடக்கத்தில் விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது முத்தம்மாளின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த ஆறுமுகம் அவரிடம் தினந்தோறும் தகராறு செய்து வந்திருக்கிறார்.
இதன் காரணமாக முத்தம்மாள் வேறு சில இடங்களில் மாறி மாறி வேலை பார்த்து வந்த நிலையிலும் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அவரது நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து தினந்தோறும் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் முத்தம்மாள் ஆறுமுகம் பணிபுரியும் ஆலையில் சேர்ந்து அவருடனே வேலைக்கு சென்று வந்த நிலையில் சந்தேகம் குறையாத ஆறுமுகம் தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.
எனவே ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த முத்தம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் ஆறுமுகம் அவ்வப்போது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று அவரிடம் சமாதானம் பேச முயற்சித்த நிலையில் அதற்கு முத்தம்மாள் மறுப்பு தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார். இதன் காரணமாக ஆறுமுகம் தனது உறவினர்களுடன் முத்தம்மாள் வீட்டிற்கு சென்று பஞ்சாயத்து பேசி “இனிமேல் சந்தேகப்பட்டு அடிக்க மாட்டேன், வேலைக்கு கூட செல்ல வேண்டும் என்னுடன் வீட்டில் இருந்தால்” போதும் என சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பின்னர் முத்தம்மாளும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிலிருந்து வந்து கணவர் ஆறுமுகத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்த வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த மனைவி முத்தம்மாளை எழுப்பிய ஆறுமுகம் “ என்னை உனக்கு பிடிக்கவில்லை..” என கேட்டு மீண்டும் தகாத வார்த்தையில் பேசு முத்தம்மாளிடம் தகராறு செய்து இருக்கிறார். இதற்கு எதுவும் பேசாமல் படித்து உறங்கிய நிலையில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் அவரது முகத்தில் ஆசிட் ஊற்றியதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து முத்தம்மாள் வலி தாங்க முடியாமல் அலறிய நிலையில், அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்தம்மாளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு கணவர் ஆறுமுகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கணவர் அவரது முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்