"ஒரு வாரம் காணாமல் போன சிறுமி.." தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு! காதல் விவகாரம்தான் காரணமா?

வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையிலுள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் ஜீவிதா.
Edappadi girl suicide
Edappadi girl suicide
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேசன்-கலா தம்பதியினர். இவர்கள் இருவரும் வெளியூரில் கிணறு வெட்டும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர்களது 16 வயது மகள் ஜீவித்ரா, 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆடி மாத பண்டிகைக்காக கலா தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரும் ஜீவித்ராவும் அப்பகுதியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு குடம் தண்ணீரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்ற ஜீவித்ரா, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த கலா, மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையிலுள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் ஜீவித்ரா.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், ஜீவித்ராவை உடனடியாக மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலை குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

16-year-old girl found dead
16-year-old girl found dead

இதனிடையே, கடந்த மாதம் 30-ம் தேதி ஜீவித்ரா காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் அவரை ஒரு வாரம் கழித்து கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதுள்ளனர். தற்போது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, ஜீவித்ரா ஏதாவது காதல் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜீவித்ரா, ஒருவரை காதலித்ததாகவும் அதனால் வீட்டில் அவரது அம்மா கண்டித்ததாகவும், அதனால்தான் வீட்டைவிட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த காரணத்தால்தான் அவர் தற்கொலை செய்திருப்பார் என்றும் கூறப்படும் நிலையில் காவல்துறை தரப்பில் இருந்து தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. மேலும், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரும் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்த விசாரணை காவல்துறையால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எடப்பாடி அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காணாமல் போன சிறுமியை மீட்டெடுத்த போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com