சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டு தற்கொலை! காரணம் என்ன?

மனமுடைந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
Savukku Shankar's son
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள நடுக்குப்பம் பகுதியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது மகன் தியோ ஆழிசை மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தியோ ஆழிசை சரியாக படிக்கவில்லை எனக் கூறி அவரது தாயார் ஆர்த்தி கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர், சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றதாகவும், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரக்காணம் அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நடுக்குப்பம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com