
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி மானாமதுரை அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு வந்தார். மாணவியை பள்ளி வாசலில் அவரது சகோதரர் இருசக்கர வாகனத்தில் இறக்கிவிட்டு விட்டு எதிரில் உள்ள கடைக்கு சென்று உள்ளார்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக காரில் வந்த ஆறு பேர் 17 வயது மாணவியை தூக்கி காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். மானாமதுரையில் கடத்தப்பட்ட சிறுமி காரில் இருந்த கும்பலோடு தொடர்ந்து சண்டைபோட்டு வந்துள்ளார். அப்போது சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் வரும் பொழுது காரில் இருந்து குதித்து தப்பியுள்ளார். காரிலிருந்து குதித்து காயம் அடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காரில் இருந்த ஆறு பேரும் முகத்தைக் துணியால் மறைத்திருந்தனர். அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து தப்பிச் சென்றனர் . பள்ளிக்குச் சென்ற மாணவியை அண்ணனின் கண் முன்னே காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.