“நான் சாகப்போகிறேன்” - பள்ளி மாணவி 13 மாடியில் இருந்து குதித்து தற்கொலை! ஜிம் பயிற்சியாளருக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்?

தனது வீட்டில் பெற்றோர்கள் தனது அண்ணனை நல்லபடியாக கவனித்து பார்ப்பதாகவும் தன்னை ஏளனமாக பார்த்து
School girl suicide
Published on: 
Updated on: 
1 min read

மாதவரம்,  பொன்னியம்மன்மேடு, ஜிஎன்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிஜய்குமார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இளைய மகள் பாலக் (வயது 14) சூரப்பட்டு அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் தனது வீட்டில் பெற்றோர்கள் தனது அண்ணனை நல்லபடியாக கவனித்து பார்ப்பதாகவும் தன்னை ஏளனமாக பார்த்து வருவதாகவும், நடத்துவதில் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது

madhavaram

இந்நிலையில், தற்போது உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளரிடம் “நான் சாகப் போகிறேன்” என செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, உடனே 13வது மாடி மொட்டை மாடிக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டார். கீழே விழுந்த மாணவிக்கு கை கால் எலும்பு முறிவு முறிந்து உடலிலும் பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டு பயங்கர ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெற்றோர்களிமும் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒன்பதாம் வகுப்பு மாணவி 13 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com