முக கவசம் அணியாததை தட்டி கேட்ட  போலீஸ்காரருக்கு கத்திக்குத்து...

முக கவசம் அணியாததை தட்டி கேட்ட  போலீஸ்காரருக்கு கத்திக்குத்து...

சென்னை செங்குன்றத்தில் முக கவசம் அணியாத போதை ஆசாமியை தட்டிகேட்ட போலீஸ்காரருக்கு கத்தி குத்து விழுந்தது.
Published on

சென்னை செங்குன்றத்தில் முக கவசம் அணியாத போதை ஆசாமியை தட்டிகேட்ட போலீஸ்காரருக்கு கத்தி குத்து விழுந்தது.

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி சானிட்டரி ஆய்வாளர் மதியழகன் என்பவர் செங்குன்றம் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். முகம் கவசம் அணியாத நபர்களிடம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறினார்.  அப்போது, மதுபோதை ஆசாமி ஒருவர் ஆய்வாளர் மதியழகனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதியழகனை குத்த முயன்றார். அப்போதுகுறுக்கே வந்த காவலர் பார்த்திபனின் கழுத்து மீது பாய்ந்தது.

பின்னர் போதை ஆசாமி காவலரின் தொடைப்பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடினார்.தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பார்திபனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் மறைந்திருந்த போதை ஆசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com