கிடா வெட்டச் சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு வாங்கி வாலிபர் மரணம்!!

வாலிபரைக் கொன்ற கொலைக் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆம்புலன்சை வழி மறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கிடா வெட்டச் சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு வாங்கி வாலிபர் மரணம்!!
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்தனர்.

அப்போது ஆலத்தூரை சேர்ந்த சிலருக்கும் மங்கலூர் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் ஏற்பட்ட மோதலில் மங்கலூரை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக் வெட்டி படுக்கொலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு  நேற்று மாலை முத்துப்பேட்டையிலுள்ள மங்கலூர் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது கொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் உறவினர்கள் கிழக்கு கடற்க்கரை அருகே ஆம்புலன்சை நிறுத்தி குற்றவாளியைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கார்த்திக் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com