தனியார் நிதி  நிறுவனங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் ...

பெண்களால் நடத்தப்படும் தனியார் நிதி  நிறுவனங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தும் குண்டர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிதி நிறுவன பெண் நிர்வாகி ரிதன்யா என்பவர் புகார் மனுவை அளித்துள்ளார்.
தனியார் நிதி  நிறுவனங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் ...
Published on
Updated on
1 min read

பெண்களால் நடத்தப்படும் தனியார் நிதி  நிறுவனங்களை குறிவைத்து தொடர் தக்குதல் நடத்தும் குண்டர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிதி நிறுவன பெண் நிர்வாகி ரிதன்யா என்பவர் புகார் மனுவை அளித்துள்ளார்.

பின்னர் தனது புகார் குறித்து ரிதன்யா  செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் திநகர் , கிண்டி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பெண்களின் சுய மேம்பாட்டுக்காக  உதவிடும் வகையில் ருத்ரா டிரேடிங் என்ற நிறுவனத்தை  பெண்கள் கூட்டமைப்புகளுடன் இணைந்து கடன் உதவி மற்றும் சேமிப்பு திட்டங்களை  நடத்தி வருவதாகவும் இதன்மூலம் பல மகளிர் குழுக்கள் பயன் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சில சமூக விரோத கும்பல்கள் பெண்களால் நடத்தப்படும் நிதி நிறுவனங்களை நோட்டமிட்டு நிறுவனங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களை திசை திருப்பும் நோக்கிலும் பொய் பிரச்சாரம் செய்து நிதி நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி  புகார் அளித்து இருப்பதாகவும்  தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com