சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: திமுக கவுன்சிலர் பதவி நீக்கம்...!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: திமுக கவுன்சிலர் பதவி நீக்கம்...!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக திமுக கவுன்சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதாச்சலம் 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி என்பவருக்கு சொந்தமாக வைத்தியலிங்கம் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி படித்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரிந்து பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மகளிர் போலீசார் சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து உண்மையைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து பாலியல் வழக்கில் தொடர்புள்ளதாக திமுக கவுன்சிலர் பக்கிரிசாமியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், அவரைக் கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக திமுக கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com