இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்... அரசுக் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்...

அரசுக் கல்லூரி பேராசிரியர் மீது இந்திய மாணவர் சங்கத்தினர் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்... அரசுக் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்...
Published on
Updated on
1 min read

கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ரகுநாதன் என்பவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

இது குறித்து பேட்டி அளித்த அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

இது குறித்த ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவுள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இது போன்றவர்கள் ஆசிரியர் தகுதி அற்றவர்கள் என விமர்சித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com