ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை - மனவளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்...

சென்னையில் ஆபாச படங்களைக் காட்டி மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை - மனவளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்...
Published on
Updated on
1 min read

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ். பிஸ்கெட் வியபாரம் செய்து வரும் இவருக்கும், கோட்டூர்புரம் ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு  2 வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மாமியார் வீட்டுக்கு செல்லும் தினேஷ், அதே குடியிருப்பில் வசிக்கும் 21 வயது மன வளர்ச்சி குன்றிய பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அண்டை வீட்டார் என்பதால் மன வளர்ச்சி குன்றிய அப்பெண் தினேஷின் மனைவியை அக்கா என்றும், தினேஷை மாமா என்றும் அழைத்து வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தினேஷின் மாமியார் வீடான கோட்டூர்புரத்திற்கு வந்த தினேஷ் தனது மனைவியை யூ.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் விட்டுவிட்டு மாமியார் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது அந்த மன வளர்சி குன்றிய பெண் குடியிருப்பின் கீழே விளையாடி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தினேஷ் அப்பெண்ணை குடியிருப்பின் இரண்டாவது தளத்திற்கு வரவழைத்து ஆபாசப் படங்களை காட்டி அப்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது தாயிடம் வயிறு வலிப்பதாகவும்,  சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று கோளாறு என நினைத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வலியால் தனது மகள் துடிப்பதைக் கண்ட தாய் தனது மகளிடம் விசாரித்த பொழுது  நடந்தவற்றை கூறியுள்ளார்.

தனது மகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து தாய் மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து மன வளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தினேஷை, கற்பழிப்பு வழக்கில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com