
உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் ஊடகவியல் துறையின் பேராசிரியராக ஜெகன் கருப்பையா வேலை செய்து வந்துள்ளார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி...!
இந்நிலையில் அதே துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், பேராசிரியர் ஜெகன் கருப்பையா தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து டி.ஐ.ஜி பொன்னி அவர்களின் உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத், கல்லூரி பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.