அண்ணன் தங்கச்சி இடையே தகாத உறவு!!வீட்டார் எதிர்த்ததால் தற்கொலை...

ராஜஸ்தானில் தங்கை அண்ணனை காதலித்த சம்பவம்  இறுதியில் விபரீத முடிவை ஏற்படுத்திய நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் தங்கச்சி இடையே தகாத உறவு!!வீட்டார் எதிர்த்ததால் தற்கொலை...
Published on: 
Updated on: 
1 min read

ராஜஸ்தான் மாநிலம் பாரன் சாதர் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒன்றாக வெளியே போவது வெளியே சுற்றுவது என இருந்தபோதிலும், உறவினர் தானே என்று இரு வீட்டாரும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

நாளடைவில் இவர்களின் சேட்டை முற்றவே இருவரும் காதலிக்கும் விஷயம் வெளியே தெரியவந்தது. ஆனால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் ஒரே ஜாதி, ஒரே மதம், உறவினர் என ஒற்றுமைகள் பல இருந்த போதும் சம்பந்தப்பட்ட இளைஞர் இந்த மாணவிக்கு அண்ணன் முறை என்பதே இதற்கு எதிராக அமைந்தது. 

இந்நிலையில், இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் வீட்டில் அழுது புலம்பியுள்ளனர். ஆனால், நாளடைவில் இதெல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து இருவீட்டாரும் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலைசெய்துக் கொண்டனர். 

இது குறித்து தகவலறிந்த  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com