“அவ நான் தாலி கட்டுன பொண்டாட்டி சார்” - காரில் பெண்ணை கடத்திய உறவினர்கள்… நடுரோட்டில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு!

பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை வழிமறித்து ஸ்ரீநிஷாவை வலுக்கட்டாயமாக...
muthu and srinisha issue
muthu and srinisha issue
Published on
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் கிருஷ்ணகிரி நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிஷா என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்து பேசி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் முத்து மற்றும் ஸ்ரீநிஷா அவரது குடும்பத்தினரை எதிர்த்து கடந்த (மார்ச் 18) ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை அடித்து துன்புறுத்திய நிலையில் காதலர்கள் குன்னம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். எனவே காவல் துறையினர் இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இருப்பினும் காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து கோபத்தில் இருந்த நிலையில் திருமணமான காதல் ஜோடிகள் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள அவரது நண்பர்கள் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருக்கின்றனர். பின்னர் அவர்கள் விருந்து முடித்து விட்டு திரும்பியபோது காதல் ஜோடியை பின்தொடர்ந்த பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை வழிமறித்து ஸ்ரீநிஷாவை வலுக்கட்டாயமாக அவர்களுடன் அழைத்து சென்றிருக்கின்றனர். அப்போது முத்து அவர்களிடம் கரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர்கள் காரில் வேகமாக செல்ல முயற்சி செய்துள்ளனர். மேலும் பெண்ணின் தாலியை காலடியும் முத்துவை தாக்கியும் தகராறில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசாரிடம் நடந்ததை கூறிய முத்து “அவ நான் தாலி கட்டிய என் பொண்டாட்டி சார்” என கூறிய நிலையில் போலீசார் பெண்ணையும் அவரது தாயையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com