தந்தையே மகளை சீரழித்த அவலம்.. கண்டுகொள்ளாமல் இருந்த தாய்! 17 வயதில் அனுபவித்த கொடுமை... இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி

வளர்ப்பு தந்தை அந்த சிறுமியை முறையற்ற விதத்தில் தொட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
Singapore foster father rape case
Singapore foster father rape case
Published on: 
Updated on: 
2 min read

தனது 17 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, 42 வயதான சிங்கப்பூரை சேர்ந்த நபருக்கு 11 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.

(பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றவாளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை)

அந்த நபர் 2022-ல் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக தந்தையை சார்ந்திருந்த, தனது ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட பெண் அந்த பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்க வேண்டாம் என முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒருநாள் வீட்டிலிருந்து தப்பி ஓடிய பிறகு, ஒரு சமூக ஆர்வலரிடமிருந்து உதவி பெற்றபோதுதான் இந்த பாலியல் வன்கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

42 வயதான அந்த நபர் (வளர்ப்பு தந்தை), உயர் நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. நீதிமன்ற ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு உறவினரின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

2021-ம் ஆண்டில், 16 வயதாக இருந்தபோது தன்னை பராமரித்து வந்த உறவினர் இறந்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண், தன் தாய், வளர்ப்பு தந்தை மற்றும் வளர்ப்பு தந்தையின் குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு குடியேறியுள்ளார்.

2022-ம் ஆண்டு ஒரு நாள் காலை, அப்போது 17 வயதாக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி, தனது வளர்ப்பு தந்தை மற்றும் கைக்குழந்தையாக இருந்த சகோதரியுடன் வீட்டில் இருந்துள்ளார். அந்த சிறுமி தன் ஒன்றுவிட்ட சகோதரியைக் குளிப்பாட்டுவதற்காகக் கழிப்பறைக்கு அழைத்துச் செல்ல படுக்கையறைக்குள் சென்றுள்ளார். அதன்பின், அந்த வளர்ப்பு தந்தை அந்த சிறுமியை முறையற்ற விதத்தில் தொட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தன்னுடைய வளர்ப்பு தந்தையின் குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அந்த சிறுமி இது குறித்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். மேலும், காவல் நிலையத்தில் கூட அவர் இது குறித்து புகார் அளிக்கவில்லை. அதன் பின்னர், சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, 2023 அக்டோபரில், பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அதன் பிறகு அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்துத் தன் தாய்க்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிறுமியின் தாய் அதுபற்றிக் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. 2023 அக்டோபர் முதல் 2024 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

பின்னர் சிறுமியின் தோழி, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தகுந்த தங்குமிடத்தைக் கண்டறிய உதவுவதற்காக ஒரு சமூக ஆர்வலரின் உதவியை நாடியுள்ளார். பாதிக்கப்பட்டவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து சமூக சேவகரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பாதிக்கப்பட்டவர் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அழைத்துள்ளார். அதன் பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவரின் வளர்ப்பு தந்தை 2024 மார்ச் 11 அன்று கைது செய்யப்பட்டார். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் வழங்குமாறு வாதிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கு வளர்ப்பு தந்தை எனும் பொறுப்புள்ள நிலையில் இருந்தது, குற்றம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நடந்திருந்தது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்