

பதின்ம பருவத்தில் தனது சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கருக்கலைப்பு செய்ய நிர்பந்திக்கப்பட்ட பெண் ஒருவர், இந்த கொடூர அனுபவத்தை குறித்து பல ஆண்டுகள் கழித்து தனது பகிர்ந்துள்ளார்.
இந்த கொடூர குற்றமானது 40 ஆண்டுகள் கழித்து வெளிவந்த நிலையில், 81 வயதான கிளைவ் சிடால் (தந்தை) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது 60 வயதான அலிசன் சிடால் (மகள்) இந்த கொடூர சம்பவத்தை குறித்து மௌனத்தைக் கலைந்துள்ளார். 1980-களின் முற்பகுதியில், கிளைவ் தனது சொந்த மகளான அலிசனை பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார்.
ஆனால், அப்போது அலிசனுக்கு மிகவும் சிறு வயது என்பதால், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவில்லை. இதனால், அலிசனின் தந்தை மிகவும் சுதந்திரமாக சுற்றி திரிந்துள்ளார்.
அலிசனுக்கு 13 வயதாக இருந்தபோது, அவரது தந்தையுடன் சேர்ந்து மீண்டும் வாழும்மாறு கூறி அலிசனை அவரது தாய் அழைத்து சென்றுள்ளார்.
சிடால் (தந்தை) அடிக்கடி வெளியூர் சென்றதால் அனைத்துமே அமைதியாக சென்றுள்ளது. அப்போதுதான் ஒருநாள் மதியம் அலிசன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சிடால் மிக கொடூரமாக அவரது மகளான அலிசனை மிகக் கொடூரமாக சீரழித்துள்ளார். அவரது உடல் முழுவதும் காயங்களால் நிறைந்து கொஞ்சம் கூட அசைய முடியாத அளவிற்கு இருந்துள்ளதுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பிறகு சிறிது நாளில் அவரது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஒருநாள் வழக்கம்போல அலிசன் பள்ளிக்கு சென்ற நிலையில், வாந்தி எடுத்து பள்ளி மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அதைத் தொடர்ந்து, சிடால் அலிசனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்குதான் அலிசன் கர்ப்பமாக இருப்பதை அறிந்துகொண்டுள்ளார்.
அப்போது சிடால் அவரது மகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர், கருக்கலைப்புக்குப் பிறகு, தனது தாயிடம் அலிசன் நடந்தந்தை விவரித்துள்ளார். ஆனால், அவர் நம்பவில்லை. மேலும், அலிசனை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
பின்னர், அலிசனை பக்கத்து வீட்டுத் தோட்டக்காரர் அலிசனை அணுகி, "என்ன ஆயிற்று?" என்று விசாரித்து, தன்னோடும் தன் பெற்றோரோடும் தங்குமாறு அவரை அழைத்துள்ளார். அதன் பிறகு அலிசானுக்கு 16 வயதானபோது அந்த நபருடன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ஆனாலும் இந்த சம்பவத்தால் மன அழுத்தத்திற்குள்ளான அலிசன் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இறுதியாக, அலிசன் 2022-ல், மது பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவ உதவியை நாடியுள்ளார். அப்போதுதான் மருத்துவரிடம் தனது கடந்த கால கோர சம்பவங்களை குறித்து பகிர்ந்துள்ளார் . இதனையடுத்து, காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், கடந்த ஜூலை மாதம், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் அலிசனின் தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது, அவரது தந்தை 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவது 'இத்தனை நாட்கள் தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனுபவித்து வந்த சம்பவத்திற்கு நீதி கிடைத்துள்ளதாக' அவர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்