ஓடும் காரில் 'ஆபாச வீடியோ' பார்த்த பெண்.. அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்! கோர விபத்தில் பலியான முதியவர் - திருமண நாள் கொண்டாடிய மறுநாளே சோகம்

விபத்து நடப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திற்கு முன்பு சாவோ ஒரு ஆபாச இணையதளத்தைப் பார்த்திருந்ததைக் காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
I-15 highway accident
I-15 highway accident
Published on: 
Updated on: 
2 min read

கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரது கைப்பேசியில் ஆபாச இணையதளத்தைப் பார்த்துக் கொண்டே, போக்குவரத்து நெரிசலில் புகுந்ததால், மூன்று கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக இடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதில் ஒரு வயதான நபர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் யூட்டாவில் கடந்த ஜூன் 12 அன்று நடந்த விபத்து தொடர்பாக, 44 வயதான கிறிஸ்டின் சாவோ என்பவர்மீது, வாகனக் கொலைக் குற்றம் கடந்த செவ்வாய்கிழமை (அக் 20) பதிவு செய்யப்பட்டது . அந்த கோரமான விபத்து நடந்த நேரத்தில், ஐ-15 நெடுஞ்சாலையில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின் காரணமாக போக்குவரத்து கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போயிருந்தது.

சாவோ வேகத்தைக் குறைக்க தவறியதால், அவரது எஸ்யூவி வாகனத்தை ஒரு காரின் மீது மோதியுள்ளார். இதனால், அந்தக் கார் முன்னால் இருந்த மற்றொரு காரின் மீது கட்டுப்பாடின்றி மோதியுள்ளது. "இரண்டு வாகனங்கள் மெதுவான வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​குற்றவாளியான கிறிஸ்டின் சாவோ ஓட்டி வந்த வாகனம், பின்னால் வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால், அந்தப் பின்னால் வந்த வாகனம் முன்னால் இருந்த வாகனத்தின் மீது மோதியதாக குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது.

"இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளிடம், "தவறு தன்னுடையது" என்று சாவோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், போலீசார் சாவோவின் கைபேசியை ஆய்வு செய்துள்ளனர். அப்போதுதான் அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, ​​விபத்து நடப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திற்கு முன்பு சாவோ ஒரு ஆபாச இணையதளத்தைப் பார்த்ததாக காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

"வாரண்ட்டின் பேரில் தொலைபேசியை ஆய்வு செய்ததில், விபத்து ஏற்படுவதற்கு இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திற்கு முன்பு சாவோ ஆபாச இணையதளத்தை அணுகியிருந்தது தெரியவந்தது," என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த இணையதளம் பொதுவாக ஆபாச வீடியோக்களைப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது," என்று காவல்துறையினர் தரப்பில் இருந்து மேலும் கூறப்படுகிறது. சாவோவின் நீல நிற எஸ்யூவி ஒரு வெள்ளை நிற செடான் மீது மோதியுள்ளது, அது பின்னர் அதற்கு முன்னால் இருந்த மற்றொரு எஸ்யூவி மீது மோதியுள்ளது. விபத்தின் காரணமாக மூன்று வாகனங்களும் சாலையிலிருந்து விலகிச் செல்லும் அளவிற்கு சென்றுள்ளன.

யூட்டா நெடுஞ்சாலை ரோந்துப் படையின்படி, கார்களில் ஒன்றின் பின் இருக்கையில் இருந்த 66 வயதான முதியவர், ஸ்காட் லாவர் லிச்ஃபீல்ட், விபத்தின்போது படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இரங்கல் செய்தியின்படி, ஸ்காட் இறப்பதற்கு ஒரு நாள் முன்புதான் அவரது மனைவி டெபியுடன் 39வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளார். "எங்கள் அன்புக் கணவர், அப்பா, மாமா, உறவினர், மருமகன் ஆகியோரின் மறைவை மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். அவர் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு சாந்தமான ஆன்மா," என்று அவரது குடும்பத்தினர் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com