சீனா பேண்ட் பாக்கெட்டுகளில் 104 பாம்புகள்? அதிகாரிகள் அதிர்ச்சி

சீனா பேண்ட் பாக்கெட்டுகளில் 104 பாம்புகள்? அதிகாரிகள் அதிர்ச்சி
Published on: 
Updated on: 
1 min read

சீனாவில் ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் கடத்தி வந்த 104 பாம்புகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷென்செனில் உள்ள ஃபியூடியன் துறைமுகத்தில் வந்த ஒருவரை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். இதனையடுத்து அவரது கால் சாட்டைக்குள் மறைத்து வைத்திருந்த பைகளை பறிமுதல் செய்து ஆய்வுசெய்ததில் அதில் 104 பாம்புகள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மூன்று பாம்புகள் வெளிநாட்டை சேர்ந்தவை என இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து விலங்குகள் இறக்குமதி மற்றும் உயிரின பாதுகாப்பு சட்டங்களை மீறியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com