

எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்ந்து வரும் புளோரிடாவைச் சேர்ந்த ஒரு மத போதகர், தனது பாதிப்பை மறைத்துவிட்டு ஒரு பதின்மவயது சிறுவனுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். மேலும், 42 வயதான டிமோதி சேனிஃபீல்ட், தனது இல்லத்தில் அந்த 14 வயது சிறுவனை மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் ரீதியாகத் தயார்படுத்தி, சிறுவனோடு பாலியல் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேனிஃபீல்ட், செயின்ட் ஜேம்ஸ் யுனைடெட் அமெரிக்கன் ஃப்ரீ வில் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் மதகுருவாகப் பணியாற்றிவந்துள்ளார். மேலும் இதற்கு முன்பு கிரிஸ்டல் லேக் நடுநிலைப் பள்ளியிலும் ஒரு பதவியை வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்தக் குற்றவாளி ஆரம்பத்தில் ஒரு டேட்டிங் செயலி மூலம் அந்தப் பதின்மவயது சிறுவனை தொடர்பு கொண்டு, பின்னர் தங்களின் தொடர் செய்தி பரிமாற்றங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மாற்றியுள்ளார் என்பதை அதிகாரிகள் அறிந்துகொண்டனர் .
அதன்பின்னர் அவர், அந்தச் சிறுவனை, சிறுவனுடைய குடியிருப்புப் பகுதியிலிருந்து ஈகிள் க்ரீக்கில் உள்ள தனது இல்லத்திற்குக் கொண்டுசென்று, அங்கு இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், வேறு ஒரு சிறுமியிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்பட்ட சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஷெரிஃப் துறை சேனிஃபீல்ட் மீது விசாரணையைத் தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சேனிஃபீல்டுடனான பாலியல் உறவைத் தொடர்ந்து, தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் 26 வயது நபர் ஒருவர் கூறியநிலையில், அவரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அந்த இளைஞருக்கு எச்.ஐ.வி அல்லது ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART) வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சிகிச்சையானது வைரஸ் பெருகுவதைத் தடுக்கவும், வைரஸ் சுமையைக் கண்டறிய முடியாத அளவிற்கு குறைக்கவும் மற்றும் மருந்து எதிர்ப்பைத் தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்ட, வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகளை ஒருங்கிணைக்கிறது. "எங்கள் பணி போதுமான வேகத்தில் இருந்தது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம், ஏனென்றால், அந்த குழந்தைக்கு தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக, நாங்கள் பாதிக்கப்பட்டவருக்கு எச்.ஐ.வி மருந்துக் கலவையை வழங்கினோம். ஆனால், டிமோதி சேனிஃபீல்டுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறிய 26 வயது இளைஞர் ஒருவர், இப்போது எச்.ஐ.வி பாசிட்டிவ் ஆக உள்ளார்," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், சேனிஃபீல்டு மதபோதகர் என்ற போர்வையின் பின்னால் ஒளிந்துகொண்டு, அதனை தவறாகப் பயன்படுத்தி, குழந்தைகளையும், இளைஞர்களையும் தன் வசப்படுத்த முயன்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் சேனிஃபீல்ட், ஜூலை 29 அன்று ஆர்லாண்டோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல், மின்னணு சாதனத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், எச்.ஐ.வி தொற்று உள்ளதை தன்னோடு இருந்தவருக்கு தெரிவிக்காமல் உடலுறவு கொள்ளுதல், போதைப்பொருள் உபகரணங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தற்போது சேனிஃபீல்டு எதிர்கொள்கிறார். மேலும், சேனிஃபீல்டுடன் பாலியல் தொடர்பு கொண்ட எவரும் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்