ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை..! லட்சங்களில் கையாடல்..!

ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில்  சோதனை..! லட்சங்களில் கையாடல்..!
Published on
Updated on
1 min read

 கிருஷ்ணகிரி மாவட்டம்: ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட 7 கொண்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தினந்தோறும் லஞ்சம் பெற்று பல்வேறு பணிகள் நடைப்பெறுவதாக தொடர் புகார்கள் வந்தது.

அதன்பேரில், கிருஷ்ணகிரி மாவட்டலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத 5 லட்சத்து 4850 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் லஞ்ச பணம் குறித்து பொறுப்பு சப் ரிஜிஸ்டர் சகிலா பேகம் மற்றும் தரகரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com