

இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதில் பீகார் தேர்தலுக்கு முன்னரே அங்கு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
வேலைக்காக புலம் பெயர்தல், விரைவான நகரமயமாக்கல், இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவது, போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது ஆகியவற்றை முறைப்படுத்தவே சிறப்பு வாக்காளர் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறினாலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள், மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாகவே இதை கருதுகின்றனர். ஆனால் இதில் உள்ள பெரிய குளறுபடி, இத்தனை அவசரம் அவசரமாக இந்த பணிகளை செய்வதுதான். அதிக மனித உழைப்பும் கால அவகாசமும் தேவைப்படும் ஒரு வேலையை குறுகிய காலத்துக்குள் முடிக்க சொல்லுவது, ‘தேர்தல் நிலைய அதிகாரிகளுக்கு (PLO) -க்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த SIR வேலைப்பளுவால், ஏற்கனவே பலர் தற்கொலை செய்த்க்கொண்ட சூழலில் மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த, 46 வயதான சர்வேஷ் சிங் என்ற பி.எல்.ஓ அதிகாரி "SIR" பணிகளின் அழுத்தம் காரணமாகத் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நபர் சர்வேஷ் சிங் அங்குள்ள ஒரு பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அக்டோபர் 7ஆம் தேதி அவருக்கு முதல் முறையாக வாக்குச்சாவடி நிலை அதிகாரி பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வேலைப்பளு தானாக முடியாத சூழலில் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பாகஅவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார், அதில் "அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்.., என் மகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். என்னால் வேலையை முடிக்கவே முடியவில்லை. இதனால் நான் ஒரு முடிவை எடுத்துவிட்டேன். எனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. கடந்த 20 நாட்களாக என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு நான்கு மகள்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் சின்ன வயது.. அவர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. நான் இந்த உலகை விட்டு வெகுதூரம் செல்கிறேன். இதற்காக என்னை மன்னிக்கவும்.. நான் இல்லாத போது என் குழந்தைகளைத் தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கண் கலங்கியவாறு வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவரது மனைவி பப்லி தேவி, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். SIR பணிகளால் BLO அதிகரைகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.